Loading...
Dr. Paul Dhinakaran

வெட்கத்திற்கு பதில் புகழ்ச்சி!

Dr. Paul Dhinakaran
26 Mar
நீண்டநாள் காத்திருப்பு உங்கள் ஆத்துமாவை சோர்வடையச்செய்கிறதா? நீங்கள் காத்திருந்த நாட்களில் நீங்கள் சந்தித்த அவமானங்களையும், வெட்கத்தையும் தேவன் நினைவில் வைத்திருக்கிறார். சக மனிதர்களின் இழிவான வார்த்தைகளை தேவன் கேட்டிருக்கிறார். உங்கள் நம்பிக்கையை விட்டுவிடாதிருங்கள். மனம் சோர்ந்துபோகாதிருங்கள்! தேவன் உங்களை உயர்த்துவார். அவர் உங்கள் எதிரிகளுக்கு முன்பாக உங்களுக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்துவார் (சங்கீதம் 23:5). இரண்டு மடங்கு கனம் உங்களுக்கு காத்திருக்கிறது. சர்வ வல்லமையுள்ள தேவன் கொடுத்திருக்கிற வாக்குறுதியை உங்களுக்கு நினைப்படுத்துகிறேன்.  “உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும்” (ஏசாயா 61:7).

தேவன் என் தகப்பனாருக்கு தோன்றி காருண்யா பல்கலைக்கழகத்தை கட்டும்படி கட்டளையிட்டார். அந் நேரத்தில் எங்களுக்கு இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடும்,  ஒரு பழைய காரும் மட்டுமே இருந்தது. அதுவும் அடமானத்தின் கீழ் இருந்தது. ஆனால், தேவன் ‘பல்கலைக்கழகத்தை உருவாக்க’ வேண்டுமென்று சொன்னவுடனேயே என் தகப்பனார் கடன் கேட்டு வங்கிக்கு சென்றார். கடனுக்காக உத்தரவாதம் தருவதற்கோ, அடமான பொருளாக தருவதற்கோ எங்களிடத்தில் எதுவும் இல்லை.  “இயேசு பல்கலைக்கழகத்தை கட்டும்படி கூறியுள்ளார். தயவு செய்து எனக்கு கடன் கொடுங்கள்” என்று கெஞ்சினார். “பல்கலைக்கழகம் தொடங்க என்ன தகுதி அவருக்கு இருக்கிறது?” என்று வங்கி அதிகாரிகளும், கல்வி அதிகாரிகளும் அவரைப் பார்த்து சிரித்தனர். ஆனால் என் தந்தையோ வங்கி கடனுக்காக அலைந்து திரிந்தார். அந்த நேரத்தில் தான், என் சகோதரி ஏஞ்சல் ஒரு விபத்தில் மரித்தார்.  என் தாத்தா திரு. துரைசாமி அவர்களும் “இறைவன் உனக்கு அந்த இடத்தைக் காட்டியுள்ளார். ஆனால், அது எங்கே இருக்கிறதென்று தெரியவில்லை. நம்மிடம் பணம் இல்லையென்றாலும், ஆண்டவர் நிச்சயமாக ஒரு வழியை திறப்பார். நான் சுற்றிலும் அலைந்து ஒரு இடத்தை தேடுகிறேன் என்று “ஊட்டி, கொடைக்கானல் மற்றம் சுற்றியுள்ள இடங்களுக்கும் அலைந்து திரிந்தார். கடைசியில் கோயம்புத்தூர், சிறுவானிக்கு அருகிலுள்ள ஒரு இடத்திற்குச் சென்றோம். என் தந்தை, “இதுதான் இடம்” என்றார். எங்கெங்கோ அலைந்து திரிவிதைக் கண்டு பரிதாப்பட்டு ஒரு வங்கி எங்களுக்கு முதல் கடனைக் கொடுத்தது. என் தாத்தா அந்த முள் பள்ளத்தாக்கில் நிலத்தை வாங்குவதற்காக, செருப்பு அணிந்து பல மாதங்கள் சீரற்ற முள் தரையில் நடந்து சென்றார். அங்குள்ள நிலத்தை விற்க யாரும் முன்வரவில்லை. “யார் நீ, எங்கே வந்தாய்?” என்று மக்கள் விரட்டியடித்தனர். ஆனால், இன்று அதே இடத்தில் காருண்யா பல்கலைக்கழகம், பள்ளிகள் மற்றும் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவ தேவன் 750 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளார். ஆயிரக்கணக்கான குழந்தைகள் அங்கு கல்வி கற்கின்றனர். பெற்றோர்கள், நோயுற்றவர்கள், வயதானவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர்.
பிரியமானவர்களே, உங்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து நீங்கள் அனுபவித்த எல்லா குறைவுகளையும்  தேவன் இன்றைக்கு மாற்றுவார். நீங்கள் வெட்கம் அனுபவித்த சகல தேசத்திலும் புகழுச்சியும் கீர்த்தியும் அடைவீர்கள் உண்டாகும் (செப்பனியா 3:19). இனி நீங்கள் எந்தவொரு இடத்திலும் வெட்கப்படமாட்டீர்கள்.  “பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்” (யாத்திராகமம் 14:13). உங்கள் வெட்கம் புகழ்ச்சியாய் மாறும். நீங்கள் தேசங்களுக்கு பெருமை சேர்த்து, ஆசீர்வாத சின்னமாக மாறுவீர்கள். தேவனுடைய நாமத்தின்கீழ் அடைக்கலமாய் வந்த உங்கள் நம்பிக்கை ஒருநாளும் வீண்போகாது. அவர் எப்பொழுதும் உங்களோடுகூடவே இருக்கிறார். ஒருநாளும் உங்களை கைவிடமாட்டார். 
Prayer:
அன்புள்ள ஆண்டவரே, 

காலைதோறும் புதிய கிருபைகளை வழங்குகிற உமது கிருபையினால் தான் நான் நிர்மூலமாகாமல் நிலைநிற்கிறேன். ஒரு தகப்பன் தனது பிள்ளையை சுமந்து செல்வதுபோல, என்னை சுமந்து செல்வதற்காக உமக்கு நன்றி. ஒரு தாயாக என்னை ஆறுதல்படுத்தியதற்கு நன்றி.  நீர் என்னை வெட்கப்படவிடமாட்டீர் என்று நான் நம்புகிறேன். உமது நாமம் மகிமைப்படும்படி நீர் என் கொம்புகளை உயர்த்துவதற்காக நன்றி. நான் வெட்கப்பட்ட ஒவ்வொரு இடத்திலும் நீர் என்னை கனம்பண்ணுவதற்காக நன்றி. என் வாழ்க்கையில் உமது மகத்துவம் வெளிப்படுவதின் மூலம் உமது நாமம் மகிமைப்படட்டும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000