Loading...
DGS Dhinakaran

முதலாவது தேவனை தேடுங்கள்!

Bro. D.G.S Dhinakaran
07 Dec
வேதத்தில் ராஜாவாகிய தாவீது நமக்கு நன்கு அறிமுகமான ஒரு நபர். அவனுடைய வாழ்க்கை அதிக மகிழ்ச்சியாலும், அதிக வேதனையினாலும் நிரம்பியிருந்தது. அவனுடைய பெயருக்கு முன்னால் அநேக தலைப்புகளை அவர் பெற்றிருந்தார். தாவீது ஒரு சங்கீதக்காரன், வெற்றி சிறந்தவன், பயமற்றவன், ஆடு மேய்ப்பவன். ஆடுமேய்க்கும் சிறுவனாயிருந்த அவனை தேவன், இஸ்ரவேலின் ராஜாவாக தெரிந்துகொண்டார். அவன் எப்பொழுதும் கர்த்தருக்கு பயந்து அவருடைய வழிகளையே கண்களுக்கு முன்பாக வைத்திருந்ததினால், அவன் எங்கு சென்றாலும் தேவன் அவனுக்கு வெற்றியை கட்டளையிட்டார். 

ஒருமுறை ஒரு குடும்பத்தினர் மிகுந்த கவலையோடு என்னை காண வந்திருந்தனர். அந்த சகோதரி என்னிடத்தில், “பிரதர், என் கணவர் 2 வருடங்களில் ஓய்வுபெறப்போகிறார். அவருடைய  உயர் அதிகாரிகள் அவரை வடக்குப்பகுதிக்கு பணிமாற்றம் செய்வதாக கூறுகின்றனர். என் குடும்பத்தினர் அனைவரும் இதை நினைத்து மிகவும் கவலையாகவும் சுகவீனமாகவும் உள்ளனர். என் கணவர் சென்னைக்கு பணி மாறுதல் கிடைத்து வந்தால், குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்” எனக் கூறினார்.” நான் அந்த சகோதரியிடம், “பணிமாறுதலை நிர்ணியிப்பது யார்?” எனக் கேட்டேன். அவர்களும்  ஒரு குறிப்பிட்ட துறையின் அமைச்சருடைய பெயரை கூறினார்கள்.  இது சாத்தியமில்லாத காரியமாக தோன்றினாலும்,  நான் அந்த சகோதரனுக்காக ஊக்கமாய் ஜெபித்தேன். ஒருநாள், நான் டெல்லிக்கு செல்லவேண்டியிருந்தது. அங்குள்ள ஒரு ஹோட்டலில்  நான் தங்குவதற்கான அறையை ஆயத்தம் செய்திருந்தனர். எதிர்பாராதவிதமாக, அந்த குறிப்பிட்ட துறையின் அமைச்சர் தன் மனைவியுடன் என்னை காண காத்திருப்பதாக ஒரு செய்தி எனக்கு கிடைத்தது. நான் அவர்களை சந்தித்து அவர்களுக்காக ஜெபித்துவிட்டு, இந்த சகோதரனுடைய பணிமாறுதலைக்குறித்து அவரிடம் பேசினேன். அவர் அந்த சகோதரனுக்கு உடனடியாக சென்னைக்கு பணிமாறுதல் கிடைக்க உதவினார். அந்த குடும்பத்தினர் எதிர்பார்த்த அற்புதம் நடந்தபடியால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். 
நீங்கள் அனுதினமும் தேவனை தேடும்போது, அவர் உங்கள் தேவைகளை சந்திப்பார். மிகுந்த அலுவல்கள் மத்தியில் ஜெபிக்க நேரமில்லை என்று சாக்கு சொல்லாதிருங்கள்.  ‘அனுதினமும்  பிரார்த்தனை செய்யுங்கள்’ சோம்பலுக்கு இடங்கொடாதிருங்கள்.  தாவீது சென்ற இடங்களிலெல்லாம் அவன் எப்படி வெற்றி சிறந்தான்? எளிதான பதில், தாவீது தன் வழிகளிலெல்லாம் கர்த்தரை முன்பாக வைத்திருந்தான். தாவீது கர்த்தரை தேடாதபோது, அவன் பாவத்தில் விழுந்துபோனான். ஆகையினால் தேவசமூகத்தில் காத்திருந்து ஜெபிப்பது மிகவும் முக்கியமான ஒரு காரியம். அதுவே நமக்கு பாதுகாப்பு. நாம் அதை செய்யும்போது பிசாசின் கிரியைகள் நம்மை ஒன்றும் செய்யாது. ஆகவே, இடைவிடாமல் பிரார்த்தனை செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவதுடன் பாதுகாக்கப்படுவீர்கள். 
Prayer:
தேவனே,

 நான் தாழ்மையுடன் உம்முடைய கிருபையை நாடி வந்திருக்கிறேன். நீதியின் வழியில் நான் நடக்கும்படி எனக்கு கிருபை செய்தருளும். நான் அனுதினமும் தவறாமல் ஜெபிக்கும்படி என்னை வழிநடத்தும். இவ்வுலக காரியங்களை கற்றுக்கொள்ளாதபடி உம்முடைய வழிகளில் நிலைத்திருக்க கிருபை பாராட்டும்.  உம்முடைய வார்த்தைகளின்படி நடக்க என்னை வழிநடத்தும். தாவீதின் பிரயாசங்களை ஆசீர்வதித்த தேவனே, என்னுடைய  பிரயாசங்களையும் அவ்வாறே ஆசீர்வதியும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

1800 425 7755 / 044-33 999 000