Loading...
Stella dhinakaran

இரட்சிப்பு தேவபெலனாயிருக்கிறது!

Sis. Stella Dhinakaran
10 Dec
“விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று வேதம் கூறுகிறது” (ரோமர் 1:17). கர்த்தருக்குப் பயந்தவர்களோடுகூ தேவன் இருப்பதை அவர்கள் விசுவாசிக்கிறபடியினால் அவர்கள் பரிசுத்தத்துடனே அவரை ஆராதிக்கின்றனர். நாம் இரட்சிப்பை பெறுவதற்கு கு தனிப்பட்ட முறையில் எவ்வித பிரயாசங்களையும் எடுக்க வேண்டியதில்லை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் வந்தால், அவர் நம்மை அன்போடு ஏற்றுக்கொண்டு நம்மை இரட்சித்து பரிசுத்தமாக்குகிறார். அவர் எப்பொழுதும் நம்மோடுகூடவே இருக்கிறார். 

கிறிஸ்துவின் சுவிசேஷத்தினால் காணப்படும் விசுவாசத்தின் மூலம் பெறுகிற இரட்சிப்பினால் உண்டாகிற தேவ பெலன், நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மிகவும் அத்தியவாசியமானது. இத்தகைய பேரின்ப வாழ்வை “பாவி பாவி” என்று அழைக்கப்பட்ட சகேயு, குடும்பமாய் அனுபவிக்கும் பாக்கியத்தை பெற்றான். கொடூர மனிதனாயிருந்த சவுல், இந்த பெலனைப் பெற்றதால் ‘பவுல்’ என்று வல்லமையுள்ள தேவ ஊழியனாக மாறினான். இன்று அருமையானவர்களே! இந்த தெய்வீக அனுபவத்தை உங்கள் வாழ்வில் பெற்றுவிட்டீர்களா?
இந்த மேன்மையான தேவ பெலனைப் பெறாதிருந்த ஒரு குடும்பத்தார், அவர்களை சுற்றி வாழ்ந்தவர்களுக்கு பெரிய வேதனையைக் கொடுத்து வந்தனர். இந்த நிலையில், அந்த வீட்டாரின் உறவினர் ஒருவர், அவர்கள் வீட்டில் ஒரு அறையில் தங்கி வேலை பார்த்து வந்தார். இவர் இந்த மேன்மையான சுவிசேஷத்தினாலுண்டான இரட்சிப்பின் பெலனைப் பெற்றவர். அவர் அவர்களோடு பழகி, மெல்ல மெல்ல இந்த சுவிசேஷத்தின் வாசனையை அந்த குடும்பத்தினர் ஒவ்வொருவருரின் வாழ்விலும் புகும்படி மிகுந்த ஜெபத்துடன் செயல்படுத்தினார். நாளடைவில் அந்த வீட்டாரும், அந்த பகுதியில் வசித்த பல குடும்பத்தினரும் கர்த்தரை அறியவும், கர்த்தருடைய நாமம் மகிமைப்படவும் கர்த்தர் அவரை வல்லமையாக உபயோகித்தார். சுவிசேஷ வாஞ்சை கொஞ்சமும் இல்லாமல், இருளடைந்திருந்த அந்த பகுதியும், விசேஷமாக அந்த குடும்பமும் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய பெலனைப் பெற்று, அந்த இடத்தில் ஒரு ஆலயத்தை அவர்களே கட்டி எழுப்பி, கர்த்தருக்குள் ஆனந்த மகிழ்ச்சி பெற ஆண்டவர் பெலப்படுத்தினார். 
Prayer:
ஆண்டவரே, 

உம் இரட்சிப்பு எத்தனை மேன்மையும், மகிமையுமானது, இதை நானும் என் வாழ்வில் பெற்று பெலனடைய கிருபை செய்தருளும். இந்த உன்னதமான இரட்சிப்பை மற்றவர்களும் பெறும்படி என்னை ஆசீர்வாதத்தின் வாய்க்காலாக மாற்றும். விசுவாசத்தினால் என்னை நிரப்பும். உம்மை உறுதியாய் பற்றிக்கொள்கிற விசுவாசத்தை எனக்கு தந்து என்னை நடத்துவீராக.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

1800 425 7755 / 044-33 999 000