Loading...

ஒருவரிலொருவர் அன்பு கூறுங்கள்!

Shilpa Dhinakaran
08 Feb
ஒருவரையொருவர் நேசிக்கும்படி வேதம் கூறுகிறது. தேவ அன்பின் தன்மை நம்மில் இருந்தால் மட்டுமே, நாம் அவருடைய பிள்ளைகள் என்று தைரியமாக சொல்ல முடியம். “அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்” (1 யோவான் 4:8) என்று வேதம் நமக்கு உறுதிப்படுத்துகிறது.“நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன் (யோவான் 13:34). இது நம்முடைய திருமணங்களில் பின்பற்றப்பட வேண்டிய மிக முக்கியமான கட்டளை. எபேசியர் 5:33-ன் படி, “உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்பு கூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்பு கூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.” நாம் நம்முடைய வாழ்க்கைத் துணையை நேசிக்கவும் மதிக்கவும் வேண்டும். ஒரு சரியான திருமணம் என்பது இரண்டு வெவ்வேறு குணங்களையுடைய நபர்களுக்கிடையே காணப்படுகிற ஒருமனமே. “திருமணங்கள் பரலோகத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்று கூறுகிறோம். ஆம், திருமண வாழ்க்கையில் சில ஏற்ற, இறக்கங்கள், தவறான புரிதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காணப்படலாம். ஆனால் உங்கள் துணையை விட்டுவிடாதீர்கள். திருமண வாழ்க்கையை இன்னும் அற்புதமாய் மாற்றக்கூடிய சில வழிமுறைகள்:

1    எப்பொழுதும் தேவனை நம்புங்கள். உங்கள் வாழ்க்கையில் அவருக்கு முதலிடம் கொடுங்கள்,  மிக முக்கியமாக உங்கள் திருமண காரியத்தில் ஆண்டவருக்கு முதலிடம் கொடுங்கள்.

2  உங்கள் துணைவருக்காக ஜெபியுங்கள்.

3  ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். ஒரு உறவில் யார் சரியானவர், யார் தவறானவர் என்பது முக்கியமல்ல, அன்பு, மகிழ்ச்சி மற்றும் சமாதானம் நிறைந்த ஒரு குடும்பத்தை கட்டுவது முக்கியமானது.

4   பொறுமையாக இருங்கள், ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள்.

5   ஒருவர்மீது ஒருவர் நம்பிக்கையுடனும், உண்மையுடனும் இருங்கள்.
முதல் திருமணத்தை தேவன் ஏதேன் தோட்டத்தில் நடத்தினார். இயேசுவின் முதல் அதிசயம் கானாவூர் திருமணத்தில் நடத்தப்பட்டது. தேவன் திருமணங்களை எவ்வளவு மதிக்கிறார் என்பதை இதன்மூலம் நாம் அறிகிறோம். எனவே, நம் வாழ்க்கையில், நம் குடும்பத்தில் நடக்கின்ற திருமணத்திற்காகவும், வாழ்க்கைத் துணைக்காகவும் ஜெபிக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு. தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் துணைவருக்கும், குறிப்பாக தேவனுக்கும் நாம் எப்போதும் நன்றி செலுத்த வேண்டும்.
Prayer:
கர்த்தராகிய இயேசுவே,

இந்த நாளுக்காக நன்றி கூறுகிறேன்.  என் கைகளின் பிரயாசங்கள் ஒவ்வொன்றையும் ஆசீர்வதித்து, பூரணப்படுத்தும். உமது அன்பினால் என்னை நிரப்பி, மற்றவர்களிடம் அன்பு காண்பிக்க உதவும். அற்புதமான துணையை எனக்குத் தந்து, ஆசீர்வதிக்கப்பட்ட திருமண வாழ்க்கையை எனக்கு அருளியதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீரே என் குடும்பத்தின் தலைவராக இருந்து வழிநடத்தும். அப்பா திருமண வாழ்க்கையின் தோல்வியினால் நொறுங்கி போயிருக்கும் உமது பிள்ளைகளை கண்ணோக்கும். தேவரீர், ஒருவிசை கிருபையாக அவர்களுக்கு மனமிரங்கி, அவர்கள் வாழ்க்கையை மீண்டுமாக கட்டி எழுப்பும். சமாதானத்தையும், சந்தோஷமான குடும்ப வாழ்க்கையையும் தந்து அவர்களை மகிழ்ச்சியாக்கும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000