Loading...
Dr. Paul Dhinakaran

இயேசு நமக்காக பாவமானார்!!

Dr. Paul Dhinakaran
09 Dec
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஏன் இந்த உலகத்திற்கு வந்தார்? ஏனென்றால், தேவன் நம்மை மிகவும் நேசிக்கிறார். தமது பிள்ளைகள் பாவத்தினால் தேவராஜ்ஜியத்தை இழந்துபோவதை அவர் விரும்பவில்லை. பாவம் என்பது மனிதனை நித்திய அழிவிற்குள் கொண்டு செல்கிறதாயிருந்தது. தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நமக்காக தந்தருளி, நம்மை அழிவிலிருந்து மீட்டு இரட்சித்தார்.  இயேசு தமது ஜீவனையே தியாகபலியாக சிலுவையிலே ஈந்தார். அவர் நம்முடைய பாவங்களையும், அவமானத்தையும், சாபத்தையும் நீக்கி நமக்கு நித்திய வாழ்வை தந்தருளினார். நாம் நம்முடைய நீதியினால் அல்ல தேவனுடைய இரக்கத்தினாலும் கிருபையினாலும்  இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்.
 
சென்னையிலுள்ள ஒரு மருத்துவ ஆய்வு நிறுவனம் விஷக்காய்ச்சலுக்காக ஒரு மருந்தை கண்டுபிடித்தனர். முதலில் விஷக்காய்ச்சலுக்கு காரணமான கிருமிகளை குதிரையின் உடலில் செலுத்தினர். குதிரையின் உடலில் இயற்கையாகவே, அந்த வைரல் தொற்றை தடுக்கும்படியாக ஒரு நோய் எதிர்ப்பு சக்தி உருவானது. அந்த நோய் எதிர்ப்பு சக்தியை எடுத்து, தரமான பரிசோதனைகளுக்கு பிறகு அதை மனிதர்களுக்கு செலுத்தினர். ஜனங்களும் குணமடைந்தனர். அதுபோலவே, சர்வ வல்லமையுள்ள தேவன் நம்முடைய பாவங்களை, இயேசு சுமந்து நமக்கு மீட்பை உண்டுபண்ணும்படியாக அவரை சிலுவையில் ஒப்புக்கொடுத்தார். நாம் பிசாசின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் பொருட்டு, அவர் சிலுவையில் அவமானங்களை சகித்தார். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். இயேசு கிறிஸ்துவை வனாந்திரத்திலே பிசாசு சோதித்தபோதும் அவர் ஒருபோதும் பாவம் செய்யவில்லை (மத்தேயு 4:1-11). இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தினால் நாம் விலைக்கிரயமாக  வாங்கப்பட்டுள்ளோம். ஆகவே, நாம் தேவனுக்கு முன்பாக ‘நீதியுள்ளவர்களாக’ வாழவேண்டும். 
இயேசு உனக்காகவும் எனக்காகவுமே சிலுவையில் மரித்தார். நம்முடைய பாவத்தை, சாபத்தை, வேதனைகளை அவர் சுமந்தார். இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களோடு வாசம்பண்ணுகிற தேவன் ஒருபோதும் உங்களை கைவிடமாட்டார். நீங்கள் கிறிஸ்துவுக்குள் நீதியுள்ளவர்களாய் வாழ்வீர்கள். ஒருவேளை உங்களுடைய பாவங்களுக்காக தேவன் உங்களை வெறுக்கமாட்டார். “கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்” (1 கொரிந்தியர் 6:20). பாவத்தினால் நீங்கள் அழிந்துபோகக்கூடாதென்று அவர் உங்களை இரட்சித்திருக்கிறபடியால், கிறிஸ்துவை நீங்கள் இரட்சகராக ஏற்று அவரை மகிமைப்படுத்துங்கள். 

இதுவரை நீங்கள் தவறான பாதையில் நடந்திருந்தாலும், ஆண்டவர் இன்றைக்கு உங்களை இரட்சிக்க இரு கரம் நீட்டி அழைக்கிறார். ஒருவேளை கடினமான சூழ்நிலைகளை நீங்கள் கடந்து சென்றாலும், ஒருபோதும் தேவனுக்கு விரோதமாக முறுமுறுக்காதீர்கள். அவர் நிச்சயமாக பிரச்சினை யாவற்றினின்றும் உங்களை விடுதலையாக்குவார். தேவனுடைய பாதத்தில் காத்திருங்கள். அவருடைய வாக்குத்தத்தங்களை உறுதியாய் பற்றிக்கொண்டு அவற்றை விசுவாசியுங்கள். அவர் நிச்சயமாக உங்களுக்கு அற்புதம் செய்வார்.
Prayer:
அன்பின் பரலோகப்பிதாவே, 

நான் தாழ்மையுடன் உம்மண்டையில் வந்திருக்கிறேன். என் பாவங்கள் யாவையும் உம்மிடத்தில் அறிக்கையிடுகிறேன். நீர் எனக்காக செய்த தியாகத்திற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். உம்முடைய கற்பனைகளை கைக்கொண்டு நீதியுள்ள வாழ்க்கையை வாழும் கிருபையை எனக்குத் தந்தருளும். உமக்கு பிரீதியான ஒரு வாழ்க்கையை வாழ இரக்கம் பாராட்டும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

1800 425 7755 / 044-33 999 000