எண்ணிமுடியாத ஆசீர்வாதங்கள்!
Dr. Paul Dhinakaran
13 Jan
வாக்குத்தத்தம் செய்த தேவன் உண்மையுள்ளவர். அவர் நிச்சயமாக தமது வார்த்தையை நிறைவேற்றுவார். ஆகவே, நீங்கள் தேவனுடைய வாக்குத்தத்தங்களை சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள். அப்பொழுது அவைகள் உங்கள் வாழ்வில் நிறைவேறும். துன்ப நேரத்திலும், சந்தோஷமான நாட்களிலும் கர்த்தருக்கு உண்மையாய் கீழ்ப்படியுங்கள். அது தேவனிடத்திலிருந்து அநேக ஆசீர்வாதங்களை உங்களுக்கு பெற்றுத்தரும். ஏசாயா 54ம் அதிகாரத்தில், தேவனுடைய பிள்ளைகளை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை ஏசாயா தீர்க்கதரிசி கூறுகிறார். தேவன் நிந்தையையும் அவமானத்தையும் நம்மை விட்டு நீக்குவார். ஆகவே. நீங்கள் கர்த்தருக்கு கீழ்ப்படிந்து அவருடைய கற்பனைகளை கைக்கொள்ளும்போது, அவர் அற்புதமான காரியங்களை உங்கள் வாழ்விலே நடப்பிப்பார்.
தென்னாப்பிரிக்காவில் 1990-ம் ஆண்டு, ஒரு தம்பதியர் வசித்து வந்தனர். அவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர்; அவரது மனைவியோ ஒரு பிரிட்டீஷ் பிரஜை. தேவன் அவர்களை இங்கிலாந்துக்கு செல்லும்படி கூறினார். அவர்கள் கீழ்ப்படிந்து இங்கிலாந்து தேசத்திற்கு சென்றனர். அப்பொழுது அவர்களுக்கு போதிய தொடர்பு அங்கு யாருமில்லை. அவர்களிடம் போதிய அளவு பொருளாதாரமுமில்லை. ஒரு இரவில், தேவன் அவர்களை எழுப்பி, ஐரோப்பா முழுவதிலும் ஒளிபரப்பக் கூடிய ஒரு கிறிஸ்தவ டி.வி. சேனலை ஆரம்பிக்க சொன்னார். அவர்களிடம் போதிய பொருளாதாரம் இல்லாவிட்டாலும், பொறுப்பெடுத்துக்கொண்டு அதற்காக ஜெபித்தார்கள். தேவன் 2 டி.வி. சேனல்களை துவக்கவும், ஐரோப்பாவின் 62 நாடுகளுக்கும் அவை ஒளிபரப்பாகவும் அதை ஆசீர்வதித்தார். 365 நாட்களும் ஒளிபரப்பாக கிருபை செய்தார்.

பிரியமானவர்களே, தேவன் விரும்புவதெல்லாம் எளிய கீழ்ப்படிதலே. அந்தக் கீழ்ப்படிதலின் மூலம் தேவனுடைய நாமம் மகிமைப்படும். நீதிமானின் கொம்பு உயர்த்தப்படும். ஆகவே. நீங்கள் தேவனிடமிருந்து ஏதாவது கட்டளைப் பெற்றிருந்தால், உடனே கீழ்ப்படிங்கள். இன்று உங்கள் இருதயத்தில் அவரது வெளிச்சம் பிரகாசிக்கட்டும். தேவனுக்காக நிறைவேற்றாத காரியம் இருந்தால், உடனே நிறைவேற்றுங்கள். அவரது ஆசீர்வாத சித்தத்தை நிறைவேற்றினால் மட்டுமே முழு திருப்தி உண்டாகும். அவர் அதிசயங்களை செய்வார். “உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்” (ஆதியாகமம் 22:18) என்ற வேதவார்த்தையின்படியே கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.
Prayer:
என்னை மிகவும் நேசிக்கிற என் அன்பு தகப்பனே,
உமது விலையேறப்பெற்ற அழைப்புக்கு நான் கீழ்ப்படியாமல் போன நாட்களை நினைத்து வருந்துகிறேன். உமது இராஜ்ஜியம் வருவதாக. உமது சித்தம் நிறைவேறுக. இரட்சிப்பின் ஒளி எங்கும் பரவட்டும். இயேசுவின் சரீரமாகிய சபை சுத்திகரிக்கப்பட்டு தேவனின் மாளிகையாக கட்டப்படட்டும்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
ஆமென்.