Loading...
Dr. Paul Dhinakaran

வார்த்தையை அருளும் கர்த்தர்!

Dr. Paul Dhinakaran
11 Sep
யூதாவிலுள்ள ஐந்து ராஜாக்களின் காலத்திலே தேவனுடைய தீர்க்கதரிசிகளில் ஒருவராக எரேமியா ஊழியஞ்செய்தார். அவருடைய தீர்க்கதரிசன ஊழியம் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. இளவயதாயிருக்கும்போதே தேவன் அவரை ஊழியத்திற்கு அழைத்தார். அதற்கு எரேமியா, “ஆண்டவரே, இதோ நான் பேச அறியேன், சிறு பிள்ளையாயிருக்கிறேன்” என்றார். அவர் தனக்கு முன்னிருந்த பெரிய வேலையைக்குறித்து மிகவும் பயந்தார். அவருக்குள்ளிருந்த பயம் தேவன் கொடுத்த தரிசனத்தைக்குறித்து ஜனங்களிடம் பேசமுடியாது என்ற காரணத்தை ஏற்படுத்தியது. ஆனால் தேவனோ, எரேமியாவிடம் “தாயின் வயிற்றில் உருவாக்கும் முன்னே நான் உன்னைத் தெரிந்துகொண்டு, என் வார்த்தைகளை உன்னுடைய வாயிலே வைத்தேன்” என்று கூறியபோது, அவனுடைய பயம் அவனைவிட்டு நீங்கியது. இன்றைக்கும் உங்கள் வாழ்வில் பயம் மிகப்பெரிய பிரச்சினையாயிருக்கிறதா? இன்று அந்த பயத்திலிருந்து தேவன் உங்களை விடுதலையாக்குவார். நீங்கள் அவருடைய வல்லமை மிகுந்த பாதுகாப்பின் கரத்திற்குள் இருப்பதை உணருவீர்கள்.

சைபர்ஃபோபியா என்பது அமெரிக்காவின் புதிய பயங்களில் ஒன்றாகும். ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தின் வணிக பேராசிரியர் குழுவின் கருத்துப்படி, ஏராளமான ஜனங்கள் கணினிகள் மீது கடுமையான அச்சம் கொண்டிருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஒரே அறையில் இருப்பது சிலருக்கு பீதியை அளிக்கிறது, சீரற்ற இதயத்துடிப்பு, சுவாசக்கோளாறு, தலைச்சுற்றல், நடுக்கம் போன்ற உணர்வுகளால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். கணினிகளில் பணிபுரிவோருக்கு தோல்வியைக்குறித்து சாதாரண பயத்தை விட, அதிகம் இருப்பதாக ஒரு சிகிச்சையாளர் கூறுகிறார். அவர்கள் வெளியேறி விடுவோம், பைத்தியம் பிடித்துவிடும் அல்லது தனது கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்று மிகவும் கவலையடைகின்றனர். இதில் ஏதாகிலும் அர்த்தம் உள்ளதா?  நிச்சயமாக இல்லை. ஆனால், ஒரு நபருக்குள் பயம் வரும்போது, அது அவர்களுடைய வாழ்க்கையை மாற்றிவிடுகிறது.  மற்றவர்களுடைய கருத்துகள் மற்றும் செயல்களை குறித்த பயத்தில் அனைவருமே சிக்கிக்கொள்கிறார்கள். 
எரேமியாவைப்போல, உங்கள் பயம் என்ற பலவீனத்தை தேவனுக்கு முன்பாக அறிக்கை செய்யுங்கள். பயம் உங்களை பிடித்திருக்கிறதா? உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு விவரத்தையும் பாதுகாக்கும் தேவனை நம்புங்கள். இவ்வுலகம் எண்ணற்ற அச்சங்களால் நிறைந்துள்ளது. ஆனால், தேவனுடைய பிள்ளையாகிய நீங்கள் இலக்கை அடைவதற்கு, பயம் ஒரு தடையாக இருக்கக்கூடாது. தமது அன்பான செட்டைகளின்கீழ் உங்களை பாதுகாத்துக்கொள்ளும் தேவனிடத்தில் உங்கள் பயத்தினை சொல்லுங்கள். தமது நோக்கத்தை நிறைவேற்றும்படி உங்களை தேர்ந்தெடுத்த கர்த்தர் ஒருநாளும் உங்களை கைவிடமாட்டார். பாதுகாக்கும் தேவகரம் ஒருநாளும் குறுகிப்போவதில்லை. அவருடைய வார்த்தையை பற்றிக்கொள்ளுங்கள், “நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்” (ஏசாயா 51:16). நீங்கள் கர்த்தருக்காக பல மைல்கற்கள் ஓடும்படியாக அவர் உங்களுக்கு உதவிச்செய்வார். கர்த்தரை நம்புங்கள். அவருடைய வாக்குறுதிகளால் உங்கள் இருதயத்தை நிரப்புங்கள். 
Prayer:
அன்புள்ள ஆண்டவரே, 

இன்று காலை இந்த வார்த்தையின் மூலம் என்னோடு பேசியதற்காக உமக்கு நன்றி. உமது பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பும். என் பயத்தையும் அச்சத்தையும் நீக்கியருளும். உமது வார்த்தையை சுமப்பதற்கு என்னை உமது பாத்திரமாகத் தேர்ந்தெடுத்தமைக்காக நன்றி. உம்மிடத்திலிருந்து நற்பலன்களை பெறுவதற்கு உதவிச்செயும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

1800 425 7755 / 044-33 999 000