Loading...
Dr. Paul Dhinakaran

உங்களை கனப்படுத்தும் தேவன்!

Dr. Paul Dhinakaran
12 Jun
இவ்வுலகத்தார் நம்மைக்குறித்து  எப்படி நினைத்தாலும் சரி, கர்த்தர் நம்மை அவருடைய சொந்த பிள்ளையாகவே எண்ணுகிறார்.  அவரை பொறுத்தவரை நீங்கள் அவருடைய பொக்கிஷம். அவர் உங்களை மிகவும் நேசிக்கிறபடியால், உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். நீங்கள் அவருக்கு ஆசையும் பிரியமுமானவர்கள். ஆனால் பற்றாக்குறைகள் நம்மை ஆளுவதற்கு தேவன் ஏன் அனுமதிக்கிறார் என்ற கேள்வி நமக்குள் எழுகிறதல்லவா? நாம்அவருடைய பெலனையும் ஆலோசனையையும் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் சில குறைவுகளை நம் வாழ்வில் அனுமதிக்கிறார். அவர் ஏற்ற நேரத்தில் அனைவருடைய கண்களுக்கும் முன்பாக உங்களை உயர்த்தி கனப்படுத்துவார்.

ஒரு சாதாரண வியாபாரி. திடீரென்று அதிக நஷ்டத்துக்குள்ளானார். உடன் பங்காளர்கள் அவரை கைவிட்டார்கள். அவரை ஆறுதல்படுத்தவோ, அவருக்கு உதவி செய்யவோ யாரும் முன்வரவில்லை. அத்துடன் அவர் வியாதிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் வேதனையோடு படுக்கையிலிருக்கும்போது, ஒருநாள், ஒரு ஆலயத்திலிருந்து வந்த இனிமையான பாடலைக் கேட்டார். மிகுந்த சிரமப்பட்டு எழுந்து, அந்த ஆலயத்தை நோக்கி மெல்ல நடக்கலானார். அந்த பாடலின் பொருள், ‘தேவன் உங்களை பராமரிக்கிறார்’ என்பதே. அந்த வார்த்தைகள் அவரது இருதயத்தை தொட்டு, புது ஜீவனைத் தந்தன. ஒரு தெய்வீக சமாதானமும் பெலனும் அவரை நிரப்பியது. அவர் முற்றிலுமாய் குணமானார். மருத்துவர்களைக் கூப்பிட்டு, “என்மீது வந்துள்ள புதுபெலனைப் பாருங்கள்” என்று மகிழ்ச்சியோடு கூறினார். அன்றிலிருந்து அவர் தன் வாழ்க்கையை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்து, புதிய வியாபாரத்தை துவங்கினார். அது செழித்தது. உலகிலேயே பெரிய தொழிலதிபரில் ஒருவராக மாறினார். அவர் தான் ஜே.சி. பென்னி. 49 மாகாணங்களில் 1400 கடைகளுக்கு உரிமையாளரானார்.
இந்த பெருக்கத்தை பாருங்கள் நண்பர்களே, வியாபாரத்தில் இழப்புகள் மற்றும் நண்பர்களால் கைவிடப்படுதல் போன்ற குறைவுகள் உங்களை சுக்குநூறாக உடைக்கிற தருணங்களில் நீங்கள் கைவிடப்பட்டதாக எண்ணுகிறீர்களா? மனம் கலங்காதிருங்கள்! "நீ என் பார்வைக்கு அருமையானபடியினால், கனம்பெற்றாய்.” (ஏசாயா 43:4) என்று தேவன் கூறுகிறார். நீங்கள் துன்பத்தில் மூழ்குவதற்கு அவர் ஒருபோதும் உங்களை அனுமதிக்கமாட்டார். தேவனுடைய வார்த்தை வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் உங்களை உயிர்ப்பித்து, உயர்த்த வல்லமையுடையது. மனிதனிடமிருந்து அல்ல பரத்திலிருந்து உங்களுக்கு உயர்வு வரும். ஜே.சி பென்னிக்கு கர்த்தர் இதை செய்யமுடியுமானால், அவர் உங்களுக்கும் செய்வார். தேவன்மீது நம்பிக்கைவைத்து அவருடைய வார்த்தையை விசுவாசியுங்கள். 
Prayer:
அன்பு தகப்பனே,

கஷ்டங்கள் இழப்புகள் மத்தியில் உம்மண்டை வருகிறேன். தொழில் தொடங்குவதற்குகூட என்னிடம் பணமுமில்லை, மனிதர்களின் உதவியுமில்லை. ஆனாலும் நான் உம்முடைய வார்த்தையை நம்புகிறேன். உம்முடைய வார்த்தை ஜே.சி. பென்னியுடைய வாழ்க்கையை மாறறியமைத்ததுபோல, என்னையும் உயர்ந்த இடங்களில் வைப்பதற்காக நன்றி கூறுகிறேன். உமது ஞானம் நிறைந்த போதனையினால் என்னை நிறைத்து, ஆசீர்வாதங்களினால் நிரப்பும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

1800 425 7755 / 044-33 999 000