Loading...

“....நான்  அவர்களுக்குள் செய்த என் அடையாளங்களையும், நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும், உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லு...என்றார்” (யாத்திராகமம் 10:2)
 
ஆண்டவர் என் அன்பு தந்தையும், அன்பின் அப்போஸ்தலருமான  சகோதரர் டி.ஜி.எஸ். தினகரன் மூலமாக வழங்கிய ஆறுதலின் செய்திகள், வல்லமையான பிரார்த்தனைகள், ஆலோசனைகள் அறிவுரைகள் மற்றும் பாடல்கள் எங்கள் குடும்பத்தினர் வழங்கிய செய்திகளும் டிஜிட்டைஸ் செய்யப்பட்டு வருகின்றன. 1975-ம் ஆண்டு முதல் இப்போது வரையுள்ள தேவ செய்திகள், பாடல்கள், பிரார்த்தனைகள், சாட்சிகள் ‘இயேசு அழைக்கிறார்’ பத்திரிகைகள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவை வரும் தலைமுறையினர் ஆசீர்வதிக்கப்படும்படி அவர்களுக்கு கிடைக்க செய்வதற்காகவே இந்த டிஜிட்டைஸ் பணி நடந்து வருகிறது. இந்தப் பணி நவீன தரத்தில் செய்யப்படும்போது, பிரார்த்தனை கலாசாலை பாடங்கள், ஆய்வு படிப்புகள், சமூக வலைதளம், புத்தகம் மற்றும் பத்திரிகை வெளியிடுதல், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு மற்றும் டி.ஜி.எஸ் தினரகன் நினைவு நூலகம் போன்றவற்றிற்கு பேருதவியாக இருக்கும். இதன்மூலம் கோடிக்கணக்கானோர் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.
 
சகோதரர் டி.ஜி.எஸ் தினகரன் நூலகத்திற்கு வருபவர்கள் தங்களுக்குத் தேவையான செய்திகளை ஒலி அல்லது ஒளி வடிவில் தனியாக கேட்டு, பார்த்து ஆண்டவரின் ஆறுதலையும், சுத்திகரிப்பையும், சமாதானத்தையும் பெற்றுக்கொள்ள இவை வகைப்படுத்தி வைக்கப்படும்.
 
‘ஆண்டவரின் செய்தி அனைவருக்கும்’ என்ற நோக்கத்தோடு டிஜிட்டைஸ் மற்றும் தரம் உயர்த்தும் பணிக்காக, நவீன தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கப்பட்டு, அதற்கேற்ற வல்லுநர்கள் இந்தப் பணிக்கென மட்டும் அமர்த்தப்பட்டுள்ளனர்.
 
பல்வேறு தேவைகள் மத்தியிலும் இந்தப் பணி இடையறாது நடந்துவருவதற்காக ஆண்டவரை துதிப்போம். இந்தப் பணியினை தங்கள் உதாரத்துவமான காணிக்கையினால் தாங்கி வரும் உங்களை போன்ற அன்பான உள்ளங்களுக்காக அவருக்கு நன்றி செலுத்துகிறோம். உங்கள் காணிக்கைகள் மூலமாக இதுவரை 9,500 ஆடியோ மற்றும் 44,000 வீடியோ செய்திகள் டிஜிட்டைஸ் செய்யப்பட்டுள்ளன. இன்னும் 4500 ஆடியோ மற்றும் 23,000 வீடியோ செய்திகள் டிஜிட்டைஸ் செய்யப்பட வேண்டியுள்ளது.
 
சகோதரர் டி.ஜி.எஸ். தினகரன் நினைவு நூலக பணிக்காகவும், இந்த டிஜிட்டைஸ் பணிக்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள். இந்தப் பணியை தொடர்ந்து செய்ய ஒரு பெரிய தொகை தேவையாயிருக்கிறது. ஆம், இதற்கு இன்னும் 3 கோடி ரூபாய் தேவை. ஆண்டவர் உங்களை வழிநடத்துகிறபடி, இந்த ஊழியத்தை தாங்குங்கள். நீங்கள் கொடுக்கும் காணிக்கை, வரும் சந்ததியினர் ஆன்மீக மன்னாவால் போஷிக்கப்பட உதவும்.

நீங்கள் ஆசீர்வாதம் பெற ஏதுவாக, பங்காளர் ஒருவரின் சாட்சியை கொடுத்துள்ளோம்.

எனக்கும், என் மனைவிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். எங்கள் குடும்ப வாழ்க்கை ஆசீர்வாதமாக இருக்கிறது. நான் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். என் வேலையுடன் சேர்த்து, தொழில் புரிவதற்காக 2007-ம் ஆண்டு பொருட்களை வேறு இடங்களுக்கு மாற்றும் நிறுவனம் (ஞயஉமநசள யனே ஆடிஎநசள) ஒன்றையும் ஆரம்பித்தேன். வாழ்க்கையும் தொழிலும் நன்றாக நடந்துகொண்டிருந்தது. 2008-ம் ஆண்டு, ‘இயேசு அழைக்கிறார்’ ஊழியத்தை குறித்து அறிந்து காணிக்கைக் கொடுக்க ஆரம்பித்தேன். பெரிதோ, சிறிதோ எனக்குக் கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை ஊழியத்திற்கென்று அனுப்பி வைப்பேன். நான் நடத்தி வந்த தொழில் திடீரென பாதிக்கப்பட்டது. ஆகவே, குடும்பத்தில் அதிக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போனோம். ஒரு கட்டத்தில் தொழிலுக்கான ஆர்டர்கள் மிகவும் குறைந்துபோய்விட்டது.
 
2015-ம் ஆண்டு, பெங்களூருவில் பேலஸ் மைதானத்தில். னுச. பால் தினகரன் நடத்திய கூட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஜெப வேளையின்போது அவர், “ஆண்டவர் உங்களை ஆசீர்வதித்து உங்கள் இருதயத்தின் விருப்பங்களை அருளிச்செய்வார்” என்று கூறினார். அந்த வார்த்தையை நான் எனக்கென்று எடுத்துக்கொண்டேன். ‘இயேசு அழைக்கிறார்’ ஊழியத்திற்கு எப்போதும் அதிகமாக காணிக்கை செலுத்த விரும்புவேன். ஆகவே, ஆண்டவர் என் பொருளாதார சிக்கலை மாற்றுவார் என்ற நம்பிக்கையோடு, மீடியா டிஜிட்டைசேஷன் பணிக்கென ரூபாய் 3000/- காணிக்கையை விசுவாசத்துடன் அனுப்பி வைத்தேன். அதிசயவிதமாக நான் கொடுத்ததை ஆண்டவர் பெருகப்பண்ணினார். என் குடும்பத்திற்கு ஆசீர்வாதம் கிடைக்க ஆரம்பித்தது. என் தொழிலுக்கு அதிக ஆர்டர்கள் கிடைத்து வருமானம் பெருகுகிறது. அதோடுகூட நான் நீண்ட நாட்கள் பணிபுரிந்து வந்த நிறுவனத்தில் எனக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைத்தது. நாங்கள், ‘இயேசு அழைக்கிறார்’ குடும்ப ஆசீர்வாத திட்டத்தில், வணிக ஆசீர்வாத திட்டத்தில், மீடியா டிஜிட்டைசேஷன் ஊழியத்தில் மற்றும் சீஷாவில் பங்காளர்களாக இருக்கிறோம் என்று பெருமிதமாக கூறுகிறோம். எங்கள் மகள் இளம் பங்காளராக இருக்கிறாள். எங்களை இந்த அளவுக்கு உயர்த்தியதற்காக, ஆண்டவருக்கும், காரணமாக விளங்கும் ‘இயேசு அழைக்கிறார்’ ஊழியத்திற்கும் நன்றி.

- சங்கர், பெங்களூரு

1800 425 7755 / 044-33 999 000